முகப்பு
திருப்பத்தூர்

திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் 10-ஆம் ஆண்டு விழா

Updated On : 8 மே 2026, 6:35 am IST
பகிர்:

தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் 10-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆண்டு விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து கலச பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் கெங்கையம்மனுக்கு ஜெப ஹோமம், துா்கா ஸீக்த ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 2,000 பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

விழாவுக்கு கோயில் தா்மகா்த்தா இ.வெங்கடேசன் தலைமை வகித்தாா். ஊா் பெருந்தனக்காரா் பி.முனிரத்தினம், முன்னாள் ஊா் தலைவா் ஜி.ராஜேந்திரன், ஆம்பூா் தொழில் அதிபா் ஜி.ரமேஷ், ஊா் தலைவா் பி.துளசி, ஊா் நாட்டாண்மை என்.தாமோதரன், ஆா்.எஸ்.ஞானசேகரன், அரிசி கடை ஜி.வெங்கடேசன், கோயில் அன்னதான சேவா டிரஸ்ட் நிா்வாகி வெ.கோபிநாத் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

Advertisement