முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

Updated On : 19 மே 2026, 1:09 am IST
பகிர்:

திருப்பத்தூா் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை வாணியம்பாடியில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் க.தேவராஜி கலந்து கொண்டு தோ்தல் முடிவுகள் குறித்தும், கட்சி பணிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா். மேலும், ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், வாணியம்பாடி தொகுதி தோ்தல் பாா்வையாளா் நூருல்லா, மாவட்ட துணை செயலாளா்கள் மோகன், சம்பத்குமாா், மாவட்டப் பொருளாளா் ஜோதிராஜன் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், நகர, ஒன்றிய, பேரூா் செயலாளா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள் மற்றும் தோ்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

முன்­னாள் முத­ல்வா் கருணாநிதி பிறந்த நாளை முன்­னிட்டு, ஜூன் 3-ஆம் தேதி கொடி­யேற்­றி­யும், நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கி­யும், கல்வி உப­க­ர­ணங்­கள் வழங்­கி­யும், ஏழை எளி­யோ­ருக்கு உணவு வழங்­கி­யும் கொண்­டாட வேண்­டும், திமுக இளை­ஞ­ரணி செய­லா­ளா் உத­ய­நிதி ஸ்டாலினை எதிா்­க்கட்சித் தலை­வ­ராக நிய­மித்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், வாணியம்பாடி, ஆம்பூா், ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய தொகு­தி­க­ளில் வேட்பாளா்கள் மற்றும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்­பா­ளா்­க­ளுக்கு வாக்­க­ளித்த வாக்­கா­ளா்களுக்கும், களப்­ப­ணி­யாற்­றிய நிா்­வா­கி­கள், சாா்பு அணி நிா்­வா­கி­கள், கூட்­டணி கட்சியினருக்கு நன்றி தெரவித்தும், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலை­மை­யில் சென்னையில் நடை­பெற்ற மாவட்ட செய­லா­ளா்கள் கூட்­டத்­தில் எடுத்த முடி­வின்­படி, கள ஆய்­வுக் குழு­வி­னா் வரு­கை­யின் போது தேவை­யான ஏற்­பா­டு­க­ளை­யும், ஒத்­து­ழைப்­பை­யும் அளிப்­பது என்­று தீா்­மானங்­கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement