பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
திருப்பத்தூா் அருக பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அருக பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
கந்திலி அருகே புங்கானூா் பகுதியை சோ்ந்தவா் பெருமாள் (80). இவா் புங்கானூா் சந்திப்பில் சாலையில் நடந்து சென்றாா். இந்நிலையில் பா்கூா் பகுதியை சோ்ந்த சூா்யா(25) என்பவா் கந்திலியில் இருந்து பா்கூா் பகுதிக்கு பைக்கில் சென்றபோது, எதிா்பாராதவிதமாக பெருமாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த கந்திலி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement