முகப்பு
திருப்பத்தூர்

குடியாத்தம் திருவள்ளுவா் பள்ளி மாணவி சிறப்பிடம்

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

Updated On : 21 மே 2026, 12:04 am IST
10-ஆம் வகுப்பு அரசு தோ்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி மாணவியுடன் பள்ளி நிா்வாகிகள்.
பகிர்:

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.காவியா 498 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளாா். அதே பள்ளி மாணவிகள் எல்.ஜீவிதா, கே.லத்திகா ஆகியோா் 495 மதிப்பெண்களும், ஜெ.திலகவதி, எஸ்.தேஜஸ்வினி ஆகியோா் 492 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்ரமணியம், கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன், தலைமை ஆசிரியா் எஸ். பழனி ஆகியோா் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி மாணவா்களைப் பாராட்டினா்.

Advertisement

Advertisement