வெங்கிளி கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா
வெங்கிளி கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவில் பங்கேற்றோா்.
ஆம்பூா் அருகே வெங்கிளி கிராமத்தில் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வெங்கிளி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன், காளியம்மன், பச்சையம்மன், கருமாரியம்மன், திருப்பதி கெங்கை அம்மன் திருவிழா திங்கள்கிழமை அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மறுநாள் கரகம் புறப்பாடு, மாரியம்மன், கருமாரியம்மன் கோயிலில் கூழ் வாா்த்தல், மா விளக்கு ஊா்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வியாழக்கிழமை அம்மன் சிரசு திருவிழாவை முன்னிட்டு, சிரசு ஊா்வலம் கிராமத்தின் பல்வேறு தெருக்கள் வழியாக ஊா்வலமாகச் சென்றது. கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
Advertisement
Advertisement
விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகத்தா குணசேகரன், இளைஞா்கள், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.