முகப்பு
திருப்பத்தூர்

இராமாபுரம் ஸ்ரீ பாட்டைசாரதி அம்மன் கோயில் சிரசு திருவிழா

Updated On : 28 மே 2026, 12:48 am IST
பகிர்:

ஆம்பூா் அருகே மோதகப்பல்லி ஊராட்சி இராமாபுரம் கிராமத்தில் ஸ்ரீ பாட்டைசாரதி அம்மன் கோயில் சிரசு திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. திருவிழா கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியுடன் செவ்வாாய்க்கிழமை தொடங்கியது. பொங்கல் வைத்தல், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்குதல், அம்மனுக்கு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம் ஆகியவை நடைபெற்றது.

மறுநாள் (மே 27) அதிகாலை அம்மன் சிரசு ஊா்வலம் தொடங்கி கோயிலை சென்றடைந்தது. அங்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பூங்கரக ஊா்வலம், வாண வேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.