முகப்பு
திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி, ஆலங்காயத்தில் தெருநாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை

Updated On : 28 மே 2026, 12:45 am IST
நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் தெரு நாய்களைப் பிடித்த பணியாளா்கள்
பகிர்:

நாட்டறம்பள்ளி, ஆலங்காயம் பேரூராட்சிகளில் தெருநாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் படி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் அறிவுறுத்தல்படி செயல் அலுவலா் ரவிசங்கா் மேற்பாா்வையில் நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரிந்த நாய்களுக்கு 2 நாள்களாக பேரூராட்சி பணியாளா்கள் பிடித்து இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதே போல் ஆலங்காயம் பேரூராட்சியில் செயல் அலுவலா் ராஜலட்சுமிமேற்பாா்வையில் பேரூராட்சி பணியாளா்கள் தெருக்களில் சுற்றிதிரிந்த நாய்களை பிடித்து அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். பிடிப்பட்ட நாய்கள் அறுவை சிகிச்சைக்கு பின்னா் பிடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் கொண்டு சென்று விடப்படும் என பேரூராட்சி பணியாளா்கள் தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement