திருவள்ளூர்

முதல் மூன்று இடங்களைப் பிடித்த 53 மாணவர்கள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளிலிருந்து 53 மாணவர்கள் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

தினமணி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளிலிருந்து 53 மாணவர்கள் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 22 ஆயிரத்து 524 மாணவிகள், 21 ஆயிரத்து 734 மாணவர்கள் உள்பட மொத்தம் 44 ஆயிரத்து 258 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசு பள்ளி, மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை 53 மாணவர்கள் பிடித்துள்ளனர்.

வருவாய் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள்: (முதல் இடம் 498) முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இ.பிரைசி, எம்.ஹரினி, வி.சவீதா, வேலம்மாள் மெட்ரிக் பள்ளி சூரப்பட்டில் வி. அர்ச்சனா, பஞ்செட்டி வேலம்மாள் பள்ளியில் எம்.ஹேமமாலினி, பாடி ஸ்பார்தன் மெட்ரிக் பள்ளி மாணவி எஸ். செலினா ஏஞ்சலின், அம்பத்தூர் வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பி.சுவாதி ஆகிய 7 பேர் 498 மதிப்பெண் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளனர்.

இரண்டாம் இடம் பிடித்த மாணவர்கள்: முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் ஆர்.ராஜஸ்ஸ்ரீ, ஆர்.பி.தனுஜா, ஆர்.விக்னேஷ்வரன், எம்.எஸ். சூர்யா ஆகியோரும், பஞ்செட்டி வேலம்மாள் பள்ளி மாணவர்கள், ஏ.ஆப்ரின், ஜே.கே.பிரகதி, எம்.வி.சுவேதா, பி.ஸ்ரீநேஷ் ஆகியோரும், சூரப்பட்டு வேலம்மாள் பள்ளியில் எஸ்.சஞ்சனா, திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியில் எஸ். திவ்யலட்சுமி, எஸ். இவாஞ்சலின், ஏ.ஜெ. பைசானா, ஆவடி நசரேத் மெட்ரிக் பள்ளி மாணவி யு.ஆப்ரின், பூந்தமல்லி செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவி எஸ். ஏஞ்சலின், அம்பத்தூர் சேதுபாஸ்கரா மெட்ரிக் பள்ளி மாணவி எம்.மீனாபிரியா, அம்பத்தூர் ரமணா கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவன் டி.ஹரிக்குமார், வாரியார் மெட்ரிக் பள்ளி மாணவன் எஸ்.ஜி.தேனரசு, முகப்பேர் டி.ஏ.வி. மெட்டிக் பள்ளி மாணவன் எம்.ஒய்.கவுரிசங்கர் ஆகியோர் 497 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.

மூன்றாம் இடத்தை பிடித்த மாணவர்கள்: முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் எஸ். அறிவுசுந்தர், எம்.வித்யா, சி.விசாலி, சி.சுதாகரன், கே.எம்.தயானந்த்ஈஸ்வர், சூரப்பட்டு வேலம்மாள் மாணவி ஐ.ஜெனிபர் ரியா, பஞ்செட்டி வேலம்மாள் பள்ளி மாணவர்கள் இ.நிறைமதி, பி.பிரேமிளா, எஸ்.சச்சின் அபிலேஷ், திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவர்கள் என்.தீபிகா, வி.ரேகாஸ்ரீ, வி.பாலகுமார், வெள்ளாட்டூர் ஸ்ரீஐயன் வித்யாலயா பள்ளி மாணவர்கள் கே.காவியா, பி.ரோஹித், முகப்பேர் டி.ஏ.வி. பள்ளி மாணவர்கள் ஜி.லட்சுமி பிரியா, எஸ்.தரணிஸ்ரீ, அம்பத்தூர் எஸ்.ஆர்.எம். பள்ளி மாணவர் வி.பிரசாந்த், திருவொற்றியூர் அவர்லேடி மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர்.ஸ்டெஃபி ஆனிகியுரி, அம்பத்தூர் ரமணா வித்யாலயா பள்ளி எஸ்.ஸ்வேதா, அம்பத்தூர் சேதுபாஸ்கரா பள்ளி மாணவர் எம்.சக்திகணேஷ், அம்பத்தூர் வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர் டி.ஜெகந்நாத், மாதவரம் செயின்ட் தாமஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் என்.சி.சுந்தரேஸ்வரா, திருநின்றவூர் செயின்ட் ஜோன்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி ஜி.அபிராமி, திருத்தணி, சுதந்திரா மெட்ரிக் பள்ளி மாணவி பி.ஜி. லோகிதா, பள்ளிப்பட்டு சாய் ஸ்ரீ மெட்ரிக் பள்ளி மாணவி ஒய்.ஜி.தேஜாஸ், ஆவடி செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவர் பி.ஹில்டன் சாம்வேல்,

காக்களூர் சி.சி.சி. ஹிண்டு மெட்ரிக் பள்ளி மாணவி ஜே.சந்தியா, பன்னூர் டான் பாஸ்கோ பள்ளி மாணவி எம்.மோனிஷா மேரி ஆகியோர் 496 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குற்றவாளி என தீர்ப்பு! நீதிமன்றத்தில் தனித்துவிடப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா

மத நல்லிணக்கம் பேசிய அயோத்திக்கு தேசிய விருது தராதது ஏன்?

ஆபரேஷன் அகால்: ஜம்மு - காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை!

'மோசமான நாள்' - காஸாவில் இஸ்ரேல் துப்பாக்கிச்சூட்டில் 106 பேர் பலி!

மக்களவைத் தேர்தல் மோசடி: 6.5 லட்சம் பேரில் ஒன்றரை லட்சம் போலி வாக்காளர்கள்! - ராகுல்

SCROLL FOR NEXT