திருவள்ளூர்

பள்ளியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

DIN

திருத்தணி ஒன்றியம், பெரிய கடம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசேகரன் தலைமை வகித்தார். ஐந்தாம் வகுப்பு மாணவர் சந்தோஷ், எம்ஜிஆர் போல் வேடமிட்டு அனைவரது பாராட்டையும் பெற்றார். இடைநிலை ஆசிரியர் கோகுலராஜ் எம்ஜிஆர் உள்பட பல குரலில் பேசி, விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்களையும், பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, எம்ஜிஆரின் சிறப்புகள், அவரது தொண்டுகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. விழா நிறைவில் மாணவர் சந்தோஷுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

கல்கியின் நாயகி!

எழும்பூர் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: உடனடியாக மீட்ட காவல்துறை

இந்திய குடியுரிமை பெற்ற பின் தனது முதல் வாக்கை செலுத்தினார் பிரபல நடிகர்

முத்தக் காட்சியில் கீர்த்தி சுரேஷ்?

SCROLL FOR NEXT