திருவள்ளூர்

மாணவர் விடுதியை இடம் மாற்றி கட்டக் கோரி ஆர்ப்பாட்டம்

DIN

கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியைக் கட்ட அரசு முடிவெடுத்த நிலையில், விடுதியை கோட்டக்கரையில் காலியாக உள்ள அரசு அலுவலக வளாகத்தில் கட்டக் கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த கோட்டக்கரையில் ஆதி திராவிடர் நலத்துறை கையகப்படுத்தி உள்ள 12 சென்ட் அரசு இடத்தில் 1.07 கோடி ரூபாய் மதிப்பில் ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி கட்ட திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த மாதத்தில் இந்த விடுதி கட்ட பூமி பூஜை நடத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த அப்பகுதி மக்கள் அங்கு வந்து இந்த இடத்தை அப்பகுதி மக்கள் விழாக்கள் நடத்தவும், பூங்கா அமைக்கவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினார். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அங்கு விடுதி கட்ட கடைக்கால் அமைக்க பள்ளம் தோண்டிய போது, மீண்டும் அங்கு வந்த அப்பகுதி மக்கள், விடுதியை வேறு இடத்தில் கட்டக் கோரி முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து இப்பகுதி மக்கள் கோட்டக்கரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் விடுதி கட்டும் பணிக்காக கட்டுமானப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வந்து இறங்கியதாகத் தெரிகிறது. இதையறிந்த அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தகவலறிந்து வந்த கும்மிடிப்பூண்டி காவல் ஆய்வாளர் சுடலைமணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பிரச்னை குறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகவும், இதுகுறித்து ஆட்சியரிடம் மக்கள் மனு அளிக்குமாறும் கூறியதையதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT