திருவள்ளூர்

செம்மரம் வெட்டியதாக 8 பேர் கைது

DIN

திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக்கடத்தியதாக திருத்தணியைச் சேர்ந்தவர் உள்பட 8 பேரை ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து செம்மரக்கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு எஸ்.ஐ. விஜயநரசிம்மலு கூறியதாவது: திருப்பதியை அடுத்த மங்களம் பகுதியில் போலீஸார் திங்கள்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப் பகுதிக்குள் செம்மரக்கட்டைகளை வெட்டி சுமந்து சென்று கொண்டிருந்த 8 பேரை சுற்றி வளைத்து போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 8 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் திருத்தணியைச் சேர்ந்த முருகைய்யா (32), ஆந்திரத்தைச் சேர்ந்த கங்கைய்யா (25), வெங்கடேஷ் (29), முனியய்யா(38), பங்காரய்யா (35), அட்டன்கி(42), சீனிவாசலு (36), நாகைய்யா (43) என்பது தெரிய வந்தது. இவர்களை திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸார் சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT