திருவள்ளூர்

காக்களூர்-புட்லூர் சாலையை அகலப்படுத்த வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

DIN

காக்களூரில் இருந்து தொழிற்பேட்டை வழியாக புட்லூர் செல்லும் சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூரை அடுத்த காக்களூரில் இருந்து புட்லூர் செல்லும் 3 கிலோ மீட்டர் நீள ஒன்றிய சாலை உள்ளது. இச்சாலை வழியாக பூங்கா நகர், ஆஞ்சநேய புரம், மாருதி நியூ டவுன் உள்ளிட்ட புதிதாக உருவாகி வரும் ஏராளமான குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல முடியும்.
இப்பகுதியினர், இருசக்கர வாகனங்களில் புட்லூர் ரயில் நிலையம் சென்று, அங்கிருந்து ரயில்கள் மூலம் சென்னை, புறநகர் பகுதிகளுக்கு தினமும் வேலைக்கு சென்று வருகின்றனர்.
மேலும், இந்த சாலை காக்களூர் தொழிற்பேட்டைக்குச் செல்லும் வழியாகவும் உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான கனரக வாகனங்களும் வந்து செல்கின்றன.
அவ்வாறு கனரக வாகனங்கள் வரும்போது சாலை குறுகலாக இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையை விட்டு கீழே  இறங்கும் நிலை உள்ளது.
சில சமயங்களில் சாலையோரப் பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து, விபத்துகளில் சிக்குகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் அந்த சாலையை இருவழிப்பாதையாக அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

SCROLL FOR NEXT