மர்மக் காய்ச்சல்:பள்ளி மாணவர் சாவு
கும்மிடிப்பூண்டி அருகே மர்மக் காய்ச்சல் பாதிப்பால் பள்ளி மாணவர் வியாழக்கிழமை இறந்தார்.
கும்மிடிப்பூண்டி அருகே மர்மக் காய்ச்சல் பாதிப்பால் பள்ளி மாணவர் வியாழக்கிழமை இறந்தார்.
பெரியபாளையத்தை அடுத்த ஆரணி அருகே மங்களம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜின் மகன் தியாகராஜன் (16). இவர், ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
கடந்த சில நாள்களாக தியாகராஜன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையவில்லை.
இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட தியாகராஜன் வியாழக்கிழமை இறந்தார்.