சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் திருவள்ளூர் அருகே சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் திருவள்ளூர் அருகே சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அருகே பட்டரைபெரும்புதூர் சுங்கச்சாவடியில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அக்கட்சியின் நிர்வாகி பொன்னுவேல் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் லோகநாதன், நகரச் செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட இளம் பாசறைச் செயலாளர் சிவசங்கர், தொகுதிச் செயலாளர் பசுபதி ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர்.
இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மத்திய அரசைக் கண்டித்து சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 28 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
இப்போராட்டம் காரணமாக திருவள்ளூர்-திருப்பதி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.