திருவள்ளூர்

காவிரி: ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

DIN

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆசிரியர் சங்கத்தினர் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
திருத்தணி சித்தூர் சாலை, கமலா தியேட்டர் எதிரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலாளர் பிரசன்னா தலைமை வகித்தார்.  
வட்டாரச் செயலாளர் கதிர்வேலு, மாவட்டத் தலைவர் பாஸ்கர், ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மாவட்ட துணைச் செயலாளர் பாலசுந்தரம் வரவேற்றார். இதில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் குப்புசாமி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலப் பொருளாளர் ஜம்பு ஆகியோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக மக்களைக் காப்பாற்ற உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்,  உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் வாரியம் அமைப்பதை வேண்டுமென்றே கால தாமதம் செய்யும் மத்திய அரசைக் கண்டிக்கிறோம். 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை மற்றும் கழிவுகள் காரணமாக அப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருவதால், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில், திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT