கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு வார விழா
செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் கோஜான் மேலாண்மை மற்றும் பொறியியல் கல்லூரி இணைந்து சாலைப் பாதுகாப்பு வார விழாவை கடந்த சனிக்கிழமை நடத்தின.
செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் கோஜான் மேலாண்மை மற்றும் பொறியியல் கல்லூரி இணைந்து சாலைப் பாதுகாப்பு வார விழாவை கடந்த சனிக்கிழமை நடத்தின.
கடந்த 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை 29ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவைக் கொண்டாட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையின் போக்குவரத்து ஆணையர் மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் சமயமூர்த்தி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, கோஜான் மேலாண்மை மற்றும் பொறியியல் கல்லூரி வளாகத்தில், செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் மோட்டார் வாகன ஆய்வாளர் எஸ்.முருகேசன் தலைமையில் சாலைப் பாதுகாப்பு வார விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி துணைத் தலைவர் என்.விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.
விழாவில் செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரி கோ.சம்பத்குமார் கலந்து கொண்டார். மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலருக்கும் போக்குவரத்து விதிகள், விபத்துகள், விதிமீறல், நிபந்தனைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.