முகப்பு
திருவள்ளூர்

சிறப்பு தடுப்பூசி முகாம்: உலக சுகாதார நிறுவன பார்வையாளர் ஆய்வு

கும்மிடிப்பூண்டியில் 10 ஊராட்சிகளில் இரு நாள்களாக நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமை உலக சுகாதார நிறுவனத்தின் புறப் பிரிவு பார்வையாளரான எஸ்.மோகனசுந்தரம் நேரில் ஆய்வு செய்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

கும்மிடிப்பூண்டியில் 10 ஊராட்சிகளில் இரு நாள்களாக நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமை உலக சுகாதார நிறுவனத்தின் புறப் பிரிவு பார்வையாளரான 
எஸ்.மோகனசுந்தரம் நேரில் ஆய்வு செய்தார்.
கும்மிடிப்பூண்டி வட்டத்தில் பிறந்த குழந்தை முதல் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு உரிய தடுப்பூசி போடாமல் இருந்தால், அவர்களுக்கான சிறப்பு தடுப்பூசி அளிப்பதற்கான முகாம் கும்மிடிப்பூண்டியில் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜெ.பிரபாகரன் உத்தரவின்பேரில், கும்மிடிப்பூண்டியில் சாணாபுத்தூர், சூரப்பூண்டி, செதில்பாக்கம், கண்ணம்பாக்கம், அயநெல்லூர், பூவலம்பேடு, பூதூர், தேர்வாய், முக்கரம்பாக்கம், மேல்முதலம்பேடு ஆகிய 10 ஊராட்சிகளில் அங்கன்வாடி மையங்களில் சுகாதாரத் துறையினர் நடத்திய இந்த முகாமையொட்டி, முதல்கட்டமாக தடுப்பூசி போடாத குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் கணக்கெடுக்கப்பட்டனர்.
தொடர்ந்து கும்மிடிப்பூண்டி  வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமையிலும், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ் மேற்பார்வையிலும் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் இந்த சிறப்பு முகாமை உலக சுகாதார நிறுவனத்தின் புறப் பிரிவு பார்வையாளரான எஸ்.மோகனசுந்தரம் நேரில் ஆய்வு செய்தார். பூவலம்பேட்டில் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற அவர், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு போடப்பட்ட தடுப்பூசிகளை ஆய்வு செய்து, அவர்களுக்கு வழங்கப்படும் மருந்தின் அளவு, ஊசிகள் புதியதாய் உள்ளனவா?, மருந்துகள் தரமாக உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்தார். கர்ப்பிணிகளுக்குப் போடப்படும் தடுப்பூசியின் பயன்களை அவர் எடுத்துக் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →