தலைக்கவசம் அணிவது குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
திருத்தணியில், தலைக்கவசம் அணிவது குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருத்தணியில், தலைக்கவசம் அணிவது குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
சாலை விதிகளைப் பின்பற்றுதல் குறித்து, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும், மதுகுடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டக்கூடாது, காரில் பயணம் செய்பவர்கள் சீட்பெல்ட் அணிந்தால் விபத்துகளைத் தவிர்க்கலாம் என மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.