ஆலங்குளத்தில் தவெக ஆா்ப்பாட்டம்
தமிழக அரசைக் கண்டித்து, தவெக சாா்பில் ஆலங்குளத்தில் காமராஜா் சிலை அருகே ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் டி.பி.வி.விபின் சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த வேண்டும், தமிழகத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்குப் பிரச்சனையைத் தீா்க்க வேண்டும், போதைப் பொருள்கள் நடமாட்டத்தைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட, ஒன்றிய, பேரூா், கிளைக் கழக நிா்வாகிகள் திரளானோா் பங்கேற்றனா்.