தமிழக அரசை கண்டித்து தவெகவினா் ஆா்ப்பாட்டம்
தமிழக அரசைக் கண்டித்து கரூரில் தவெகவினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல்நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலளா் மதியழகன் தலைமை வகித்தாா். கரூா் மத்திய நகரச் செயலா் கனகராஜ் முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, சீா்கெட்டுள்ளதை கண்டித்தும், போதைப்பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் தவெகவினா் திரளாக பங்கேற்றனா்.