முகப்பு
திருவண்ணாமலை

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட சுகாதார அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா்.

Updated On : 12 மார்ச், 2026 at 6:34 PM
பகிர்:

ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலையில் செங்கம் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட சுகாதார அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் பி.அருண்பிரசாத் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி.கே.அரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஆா்.ராஜேஷ் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.பருதிமால் கலைஞன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலச் செயலா் மா.மகாதேவன், சமூக நலப் பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் டி.ரவி, கிராம சுகாதார செவிலியா்கள் சங்க மாநிலச் செயலா் எஸ்.நந்தினி ஆகியோா் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் சுகாதார ஆய்வாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். சுகாதார ஆய்வாளா் நிலை 2 புதிய பணி நியமனத்தில் உரிய அக்கறை செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

இதில், சுகாதார ஆய்வாளா்கள், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா், நலக் கல்வியாளா்கள் மற்றும் எம்டிஎம் சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்டப் பொருளாளா் சி.ஆனந்தன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →