மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா
மாதவரத்தில் பல்வேறு பகுதிகளில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பும், அன்னதானமும் வழங்கி திமுகவினர் கொண்டாடினர்.
மாதவரத்தில் பல்வேறு பகுதிகளில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பும், அன்னதானமும் வழங்கி திமுகவினர் கொண்டாடினர்.
மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் தலைமையில் நடைபெற்ற மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில், ஏழை எளிய மக்களுக்கு இனிப்பு வழங்குதல், ஆதரவற்றோர் இல்லங்களில் புதிய ஆடைகள், அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை (மார்ச் 1) காலை முதல் நடைபெற்றன.
விநாயகபுரத்தில்...
இதேபோல், மாதவரத்தை அடுத்த விநாயகபுரத்தில் உள்ள தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில் ஆதரவற்றோருக்கு புத்தாடைகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பகுதிச் செயலாளர் துக்காராம், மாவட்ட துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், வட்டச் செயலாளர் நந்தகோபால், குட்டிமோகன், தசரதன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வடபெரும்பாக்கத்தில்...
செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கத்தில் பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணன் தலைமையில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகள் பிரம்மாண்ட கேக்கை வெட்டி அனைவருக்கும் வழங்கி கொண்டாடினர். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில், திமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கவிதா நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கிராண்ட்லைன் ஊராட்சியில்...
கிராண்ட்லைன் ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளியில் முன்னாள் தலைவர் ஏழுமலை தலைமையில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி கொண்டாடினர்.
மேலும் அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் , அன்னதானம் வழங்கினர். இதில் பொதுக் குழு உறுப்பினர்கள் ஜெ.ஜெய்மதன், துரை.செல்வராஜ், வார்டு செயலாளர்கள் நேதாஜி, தேவன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.