முகப்பு
திருவள்ளூர்

வன்கொடுமை தடுப்புக் குழு கலந்தாய்வுக் கூட்டம்

திருவள்ளூரில், வன்கொடுமை தடுப்புக்குழு கலந்தாய்வுக் குழு கூட்டம் ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

திருவள்ளூரில், வன்கொடுமை தடுப்புக்குழு கலந்தாய்வுக் குழு கூட்டம் ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வுக் குழுவினர் பங்கேற்ற இந்த கலந்தாய்வுக் கூட்டத்திற்கு ஆட்சியர் தலைமை வகித்தார். 
இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான (வன்கொடுமை தடுப்பு) விதிகள் 1995 மற்றும் திருத்த விதிகள் 2016 ஆகியவை முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
அதைத் தொடர்ந்து, வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட தீருதவி, மறுவாழ்வு மற்றும் அவை பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. 
இச்சட்டப்படி தொடுக்கப்பட்ட வழக்குகள் குறித்தும், இச்சட்டத்தை செயல்படுத்தும் பல்வேறு அலுவலர்கள் மற்றும் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும், மாநில அரசிடமிருந்து பெறப்படும் பல்வேறு அறிக்கைகளை செயல்படுத்துதல் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. 
இதில், கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், அலுவல் சாரா உறுப்பினர்கள் பிரபு, வசந்தி, ரவி மற்றும் வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →