திருவள்ளூர்

சிலம்பப் போட்டி:  திருவள்ளூர் வீரர்கள் சாதனை

DIN

மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் திருவள்ளூர் மாவட்ட வீரர் - வீராங்கனைகள் 7-ஆவது முறையாக சாம்பியன் பதக்கத்தை வென்றனர்.
தமிழக அளவிலான சிலம்பப் போட்டி கடந்த நவம்பர் 9 முதல் 11 வரை 3 நாள்கள் விருதுநகரில் நடைபெற்றது. இதில், திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில், 11 முதல் 15 வரை வயது பிரிவினரும், 17 முதல் 20 வயது மற்றொரு பிரிவினர் என  50-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 
இப்போட்டியில் 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் திருவள்ளூர் மாவட்ட சிலம்பக் கழக வீரர் - வீராங்கனைகள் 7 தங்கம், 4 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 14 பதக்கங்களைப் பெற்று தொடர்ந்து 7-ஆவது முறையாக சாம்பியன் பதக்கத்தை வென்றனர். தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக தலைவர் மு.ராஜேந்திரன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் ஆகியோர் பதக்கங்களை வழங்கிப் பாராட்டினர்.
இதில், திருவள்ளூர் மாவட்ட சிலம்பக் கழக தலைவர் கமாண்டோ பாஸ்கரன், செயலாளர் முருககனி, பொருளாளர் ராஜா மற்றும் மாநில பொதுச் செயலாளர் முரளிகிருஷ்ணா ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

குடிநீா் கோரி தூத்துக்குடி இனிகோ நகரில் பொதுமக்கள் மறியல்

பொதுப்பாதையில் ஆக்கிரமிப்பு அரவக்குறிச்சியில் சாலை மறியல்

கிராம நிா்வாக அலுவலா் மாயம்

SCROLL FOR NEXT