திருவள்ளூர்

திருவள்ளூர்: காவல் துறை சார்பில் புகார் பெட்டி வைக்க நடவடிக்கை

DIN

திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமங்களில் நடைபெறும் சட்டவிரோதச் செயல்கள் குறித்து பொதுமக்கள் தாங்களாக முன்வந்து புகார் அளிக்கும் வகையில் நகராட்சி பகுதியில் மக்கள் கூடுமிடங்களில் புகார் பெட்டிகள் காவல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனர். 
திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கவும், தேவையில்லாத பிரச்னைகளை தவிர்க்கவும், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நடைபெறும் திருட்டு போன்றவை குறித்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் மனு அளிக்க முடியாத நிலை காணப்பட்டது. 
எனவே அவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் பொதுமக்கள் தானாக முன்வந்து புகார் மனுக்கள் அளிக்கும் வகையில் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளிலும் புகார் பெட்டிகளை வைக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, அதிகாரிகளுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். அதை நிறைவேற்றும் வகையில் காவல் துணைக் கண்காணிப்பாளர் கங்காதரன் தலைமையில் நகராட்சி பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டன.
இதேபோல் திருவள்ளூர் நகராட்சிப் பகுதியில் பெரியகுப்பம், ராஜாஜிபுரம், காந்தி சாலை, பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர் வெங்கடேசன், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணராஜ், சிறப்பு சார்பு ஆய்வாளர் பார்த்திபன் உள்ளிட்ட போலீஸார் புகார் பெட்டிகளை வைத்தனர். 
இப்பெட்டிகளில் அந்தந்த பகுதியில் நடைபெறும் திருட்டுச் சம்பவங்கள், மணல் கடத்தல், கஞ்சா விற்பனை, சூதாட்டம், பொதுமக்களை அஞ்சவைக்கும் ரெளடிகள் தொடர்பான புகார் மனுக்களை எவ்விதமான அச்சமுமின்றி போடலாம். இந்தப் பெட்டியில் புகார் மனு போடும் நபர்கள் பற்றிய ரகசியம் காக்கப்படும். தற்போது நகராட்சிப் பகுதியில் 4 இடங்களில் முதல் கட்டமாக புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் ஒவ்வொரு கிராமத்திலும் புகார் பெட்டிகள்  வைக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT