திருவள்ளூர்

திருத்தணி அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

DIN


திருத்தணி அருகே மணல் கடத்தி வந்த லாரி ஓட்டுநர் போலீஸாரை கண்டதும் தப்பியோடினார். லாரியை திருத்தணி போலீஸார் பறிமுதல் செய்தனர்.
வேலுôர் மற்றும் சித்துôர் மாவட்டத்தில் இருந்து திருத்தணி வழியாக லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னியின் உத்தரவின் பேரில் போலீஸார் திருத்தணி - அரக்கோணம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அதிவேகமாக வந்த லாரியை நிறுத்துமாறு போலீஸார் சைகை காட்டியதும், லாரி ஓட்டுநர் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடினார். போலீஸார் லாரியை பறிமுதல் செய்து சோதனை செய்தபோது, அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, தப்பியோடிய ஓட்டுநர் மற்றும் லாரி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து திருத்தணி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

இந்திய விமானப்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

SCROLL FOR NEXT