திருவள்ளூர்

அமமுகவினர்  நிலவேம்பு குடிநீர் வழங்கல்

DIN

கும்மிடிப்பூண்டி அருகே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நடவடிக்கையாக கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அமமுகவினர் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலை மற்றும் நாயுடுகுப்பம் பகுதியில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்விற்கு அக்கட்சியின் கும்மிடிப்பூண்டி ஒன்றியச் செயலாளர் எஸ்.சுரேஷ் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் டி.ஆனந்தராஜ், சி.கே.பாபு, 
ஏ.எம்.கோபி, இ.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிஜாமுதீன், மகளிர் அணி நிர்வாகி உமா மகேஸ்வரி , பல்லவாடா ஊராட்சி செயலாளர் சார்லஸ், 
சீ.ஆர்.சீனு, எம்.பத்மநாபன், ஆர்.ஐயப்பன், ஆர்.ராஜி, பி.எம்.ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூவலை ஊராட்சி செயலாளர் ஆனந்தன் வரவேற்றார்.
தொடர்ந்து, பூவலையில் அமமுகவினர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினர்.
அதே போல, நாயுடுகுப்பம் கிராமத்திலும் நிலவேம்பு குடிநீரை வீடு வீடாகச் சென்று வழங்கினார்கள். இதைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள 61 ஊராட்சிகளிலும் அமமுக சார்பாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும் என நிகழ்வின்போது ஒன்றியச் செயலாளர் சுரேஷ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT