திருவள்ளூர்

போலி ஜாமீன் மூலம் புழல் சிறையில் இருந்து தப்பிய கைதி

DIN

புழல் மத்திய சிறையில் இருந்து போலி ஜாமீன் மூலம் தப்பிச் சென்ற கைதியை போலீஸார் தேடி வருகின்றனர். 
சென்னை அடையாறு தாமோதரபுரம் 4-ஆவது தெருவைச் சேர்ந்தவர் முகமது ஷெரீப்(27). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் திருட்டு வழக்கில் ராயப்பேட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 
இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி முகமது ஷெரீப்புக்கு ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளதாக சிறை அதிகாரிகளிடம் தெரிவித்
தாராம். இதையடுத்து, அக்டோபர் 5-ஆம் தேதி அவரை போலீஸார் விடுவித்தனர். 
அதன் பிறகுதான் பல்வேறு வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைக்காததும், அவர் போலி ஜாமீன் மூலம் தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீஸாரை நூதன முறையில் ஏமாற்றித் தப்பித்த முகமது ஷெரீப்பை கண்டுபிடித்து கைது செய்ய புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், புழல் காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையில் போலீஸார்  முகமதுஷெரீப்பை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT