முகப்பு
திருவள்ளூர்

அக்.26-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அக்டோபர் 26-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Updated On : 23 அக்டோபர், 2018 at 4:14 AM
பகிர்:


விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அக்டோபர் 26-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் நோக்கத்தில் மாதந்தோறும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்மாதத்திற்கான கூட்டம் அக்டோபர் 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது. 
இக்கூட்டத்தில் விவசாயிகளின் குறைகளைத் தீர்க்கும் வகையில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, மின்வாரியம், கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மற்றும் இதர வேளாண் துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதனால், இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம் அல்லது நேரில் தெரிவிக்கலாம். இதுபோன்று தெரிவிக்கப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட உள்ளதால் விவசாயிகள் தவறாமல் பங்கேற்று பயனடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.