சபரிமலை விவகாரம்: கண்டன ஆர்ப்பாட்டம்
சபரிமலைக்கு பெண்கள் செல்வதைத் தடை செய்ய வேண்டும் எனவும், நீதிமன்ற உத்தரவை மறு சீராய்வு செய்ய வேண்டும்
சபரிமலைக்கு பெண்கள் செல்வதைத் தடை செய்ய வேண்டும் எனவும், நீதிமன்ற உத்தரவை மறு சீராய்வு செய்ய வேண்டும் எனவும் கோரி அகில இந்திய இந்து சத்திய சேனா அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய இந்து சத்திய சேனா சார்பில், பெரம்பூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அந்த அமைப்பின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், அமைப்பின் நிறுவனத் தலைவர் வசந்த்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சபரிமலைக்கு பெண்கள் செல்வதை தடை விதிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை மறு சீராய்வு செய்ய வேண்டும். இதேநிலை நீடித்தால், உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் புலவந்திபோஸ், சிவக்குமார், மணி, ராஜா, மாவட்டச் செயலாளர்அந்தோணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.