வழிப்பறி வழக்கில் 2 பேர் கைது
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வழிப்பறி சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து சிறையில்
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வழிப்பறி சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கும்மிடிப்பூண்டி சிறுபுழல்பேட்டையை அடுத்த புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி சண்முகபாண்டியன்(43). அவர் கடந்த ஏப்ரல் மாதம் தனது வீட்டிற்கு சிப்காட் தொழிற்பேட்டை வழியே பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து பணம் மற்றும் விலை உயர்ந்த பொருள்களை திருடிக் கொண்டு தப்பியோடியது. இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த இருவரை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழிப்பறியில் தொடர்புடைய மணி(28), எண்ணூரைச் சேர்ந்த லாவா குமார்(29) ஆகிய இருவரையும், கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.