திருவள்ளூர்

பள்ளி வேன்-லாரி உரசல்:  5 மாணவர்கள் காயம்

DIN

மீஞ்சூர் அருகே திங்கள்கிழமை பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் வேன் மீது கன்டெய்னர் லாரி உரசியதில் 5 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
மீஞ்சூரில் இருந்து  பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு, பஞ்செட்டி பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக். பள்ளிக்கு தனியார் வேன் சென்று கொண்டிருந்தது. வேனில் 22மாணவர்கள் அமர்ந்திருந்தனர். மீஞ்சூர்- பொன்னேரி சாலையில் உள்ள நாலூர் ஏரிக்கரை அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, வேனை முந்த முயன்றது. 
அப்போது வேனை உரசியபடி லாரி சென்றுள்ளது. இதையடுத்து, வேன் மற்றும் லாரி ஓட்டுநர்கள் பிரேக் பிடித்துள்ளனர். அப்போது லாரியும், வேனும் உரசியபடி நின்றன. இதில், வேனின் முன்புற கண்ணாடி உடைந்தது. வேனில் இருந்த  5 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவர்கள் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினர். இதுகுறித்து, மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT