திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் தேர்த் திருவிழா

DIN


திருத்தணி முருகன் கோயிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது. 
இக்கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஒவ்வொரு வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 
பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7 மணிக்கு புதிதாக உருவாக்கப்பட்ட மரத்தேரில் உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் தேரை வடம் பிடித்து மாடவீதியில் இழுத்துச் சென்றனர். தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.  புதன்கிழமை இரவு முருகப் பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

SCROLL FOR NEXT