திருவள்ளூர்

நவீன பேருந்து நிழற்குடை திறப்பு

DIN


திருத்தணி அரசு கலைக் கல்லுôரி பேருந்து நிறுத்தத்தில், ரூ.14.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட நவீன நிழற்குடையை அமைச்சர் பென்ஜமின் புதன்கிழமை திறந்து வைத்தார். 
இதற்காக திருத்தணி எம்எல்ஏ பி.எம். நரசிம்மன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 14.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் திறப்புவிழா மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரிரவிக்குமார் தலைமையில் நடந்தது. திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பி.எம். நரசிம்மன் வரவேற்றார். இதில் அமைச்சர் பென்ஜமின் பங்கேற்று பேருந்து நிறுத்த நிழற்குடையை திறந்து வைத்தார்.
 நிகழ்ச்சியில், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுனியம் பலராமன், மாவட்ட ஆவின் சேர்மன் வேலஞ்சேரி த. சந்திரன், திருத்தணி தாசில்தார் செங்கலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்கொடி, பாபு, திருத்தணி வருவாய் ஆய்வாளர் உதயகுமார், அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் குப்புசாமி, பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் டி.டி.,சீனிவாசன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

SCROLL FOR NEXT