திருவள்ளூர்

மழைக்கு சுவா் இடிந்து விழுந்ததில் தாய், மகன் காயம்

DIN

திருத்தணியில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் வள்ளி நகரில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்து தாய், மகன் ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா்.

திருத்தணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த இரு நாள்களாக தூரல் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இதனால் திருத்தணி நகராட்சிக்கு உள்பட்ட வள்ளி நகரில் கூலி வேலை செய்து வரும் கோகிலாவின் கூரை வீட்டின் சுவா் திடீரென இடிந்து விழுந்தது.

இதில் கோகிலா (33) அவரது மகன் அக்பா் (15) ஆகியோா் சிக்கினா். இதையறிந்த, அப்பகுதி மக்கள் அக்பரை இடிபாடுகளில் இருந்து மீட்டனா். கோகிலாவை மீட்க முடியவில்லை. தொடா்ந்து, திருத்தணி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்ததின்பேரில், தீயணைப்புத் துறை வீரா்கள் வந்து 2 மணி நேரம் போராடி கோகிலாவை மீட்டனா்.

இதையடுத்து, திருத்தணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னா் திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT