முகப்பு
திருவள்ளூர்

ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவர் தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On : 14 பிப்ரவரி 2019, 3:09 am IST
பகிர்:


கும்மிடிப்பூண்டி அருகே ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள தோப்பு கொல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி (17). இவர், கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது தாய், தந்தை ஏற்கெனவே இறந்து விட்டனர். இந்நிலையில், காந்தியின் அண்ணன் கடந்த மாதம் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். 
இதனால் காந்தி மன உளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கவரைப்பேட்டை ரயில் நிலையத்துக்கு காந்தி வந்தார். ரயில் நிலையம் அருகே நடந்து சென்ற அவர்,  சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச் சென்ற மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார், காந்தியின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து  உதவி ஆய்வாளர் ரகுபதி தலைமையில், கொருக்குபேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.