திருவள்ளூர்

அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவப் பிரிவு தொடக்கம்

DIN

திருத்தணி அரசு பொது மருத்துமனையில் இயற்கை மருத்துவப் பிரிவு புதன்கிழமை தொடங்கப்பட்டது.
திருத்தணி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில், ஏற்கெனவே சித்த மருத்துவப் பிரிவு திறக்கப்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை, ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருத்தணி அரசு மருத்துவமனையில் இயற்கை மற்றும் யோகா மருத்துவப் பிரிவு புதன்கிழமை புதிதாகத் தொடங்கப்பட்டது.  இப்பிரிவின் மருத்துவராக மோனிகா விஜயகுமார் நியமிக்கப்பட்டு, பணியில் சேர்ந்துள்ளார்.
 இதுகுறித்து மருத்துவர் மோனிகா கூறுகையில், தமிழகம் முழுவதும், 72 அரசு மருத்துவமனைகளில் இப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தற்போது திருத்தணி அரசு மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. தற்போது யோகா, அக்குபஞ்சர், உணவு உண்ணும் முறைகள், வாழை இலை குளியல், மண், நீர் சிகிச்சை அளிக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT