திருவள்ளூர்

தனியார் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி

DIN

திருவள்ளூரில் தனியார் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திங்கள்கிழமை இரவு திருட்டு முயற்சியில் ஈடுபட்டனர். இரும்பு லாக்கரை உடைக்க முடியாததால் ரூ. 5 லட்சம் ரொக்கம் தப்பியது. 
திருவள்ளூர் ஜே.என்.சாலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 3 ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதனால் நாள்தோறும் ரூ.5 லட்சம் வரையில் வசூலாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளர் மோகன்ராஜ். திங்கள்கிழமை மாலை பணிகளை முடித்து விட்டு, அலுவலகத்தை பூட்டிச் சென்றார். செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு நிதி நிதி நிறுவனத்துக்கு வந்தபோது, இரும்பு ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து உடனே அவர் திருவள்ளூர் நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, காவல் ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது, பணம் வைக்கப்பட்டுள்ள இரும்பு லாக்கரை மர்ம நபர்கள் உடைக்க முயற்சித்திருந்ததும்,  உடைக்க முடியாததால் திரும்பிச் சென்றதும் தெரியவந்தது.          
மேலும், இந்த நிதி நிறுவனத்தில் இருந்து எதையும் எடுத்துச் செல்ல முடியாததால், ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இரும்பு லாக்கரை உடைக்க முடியாததால் அதில் வைத்திருந்த ரூ. 5 லட்சம் ரொக்கம் தப்பியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT