திருவள்ளூர்

திருத்தணியில் ரூ. 3 கோடியில் தார்ச் சாலை அமைக்கும் பணி தீவிரம்

DIN

திருத்தணி நகராட்சியில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் 15 முக்கிய தார்ச் சாலைகள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
திருத்தணி நகராட்சியின், 21 வார்டுகளில் அனைத்தும் சிமெண்ட் மற்றும் தார்ச்சாலைகளாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே மாற்றப்பட்டது. இந்நிலையில், சாலைகளை முறையாக நகராட்சி நிர்வாகம் பராமரிக்காததால் பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
குறிப்பாக, காந்தி நகர், நல்ல தண்ணீர் குளக்கரை, முருகப்பா நகர், என்.எஸ்.சி.போஸ் சாலை ஆகிய சாலைகள் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக சிரமப்பட்டு வந்தனர். 
இதையடுத்து, திருத்தணி நகராட்சி நிர்வாகம் மேற்கண்ட முக்கிய சாலைகள் தற்போது சீரமைத்து புதிய தார்ச் சாலைகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ. 3 கோடி மதிப்பீட்டில் தார்ச் சாலைகள் அமைக்கும் பணிகள் தற்போது துரிதகதியில் நடந்து வருகிறது. இப்பணிகள் முழுவதும் அடுத்த மாதத்தில் முடிவடைந்து வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்கு விடப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT