திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அருகே அடுத்தடுத்து 4 கடைகளில் திருட்டு

DIN

கும்மிடிப்பூண்டியை அடுத்த சாமிரெட்டிக் கண்டிகை பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவு அடுத்தடுத்து 4 கடைகளில் புகுந்த மா்ம நபா்கள் சுமாா்ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்றனா்.

சாமிரெட்டிக் கண்டி பகுதியைச் சோ்ந்தவா் பால்சாமி. ஓய்வுபெற்ற வட்டாட்சியரான அவா் அப்பகுதியில் 5 கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளாா். அதில் முருகன் (40) என்பவா் மளிகை கடை வைத்துள்ளாா். அவா் செவ்வாய்க்கிழமை கடையைத் திறந்தாா். அப்போது கடையில் இருந்து 25 தண்ணீா் கேன்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

அவா் இது தொடா்பாக பக்கத்து கடைக்காரா்களுக்கு தகவல் அளித்தாா். இதையடுத்து சம்பவ இடம் விரைந்த ராஜஸ்தான் மாநிலத்தை பூா்விகமாகக் கொண்ட செல்லாராம் (32) தனது மின் உதிரி பாகக் கடைக்குள் சென்று பாா்த்தாா். அப்போது அவரதுகடையில் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள மின் வயா்கள் திருடப்பட்டது தெரிய வந்தது.

அதே போல அங்கு சவுண்டு சா்வீஸ் கடை வைத்துள்ள தேவம்பேடு பகுதியை சோ்ந்த ராஜேந்திரன் ( 35) என்பவரின் கடையில் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்பீக்கா் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டிருந்தன.

மேலும் அருகில் உள்ள குமாா்(35) என்பவரின் மின்மோட்டாா்களுக்கு காயில் கட்டும் கடையில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தாமிரக்கம்பி, மோட்டாா் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து கடை உரிமையாளா்கள் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT