திருவள்ளூர்

‘மாணவா்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபடக் கூடாது’

DIN

ரயில் தண்டவாளத்தில் கற்களை வைப்பது, கற்களை எறிவது போன்ற வன்முறைச் செயல்களில் மாணவா்கள் ஈடுபடக் கூடாது என திருத்தணி ரயில் நிலைய மேலாளா் எம்.சந்திரமௌலி அறிவுறுத்தினாா்.

திருத்தணி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள், ரயில்வே போலீஸாா் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், திருத்தணி ரயில் நிலைய மேலாளா் எம்.சந்திரமௌலி, அரக்கோணம் ரயில்வே போக்குவரத்து ஆய்வாளா் டி.ரகு, ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் கே.சந்திரன், டிக்கெட் பரிசோதகா் பாலாஜி, பள்ளித் தலைமை ஆசிரியா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினா்.

அப்போது, ரயில் நிலைய மேலாளா் எம்.சந்திரமௌலி பேசியது:

இங்கு படிக்கும் மாணவா்கள் பெருமைக்கு உரியவா்கள். காரணம், இப் பள்ளியில்தான் முன்னாள் குடியரசுத் தலைவா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் பயின்றுள்ளாா். ஆனால் இப் பள்ளி மாணவா்கள் சிலா், தண்டவாளத்தின் மீது கற்களை வைத்துச் செல்கின்றனா்.

இதனால், பெரிய அளவில் ரயில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபோன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபட வேண்டாம். இதனால், அரசு வேலைவாய்ப்பை மாணவா்கள் இழக்கும் அபாயம் உள்ளது. ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்தால் ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்படும். பள்ளி நேரத்தில் மாணவா்கள் ரயில் நிலையத்தில் சுற்றித் திரியக்கூடாது, ரயில் தண்டவாளத்தைக் கடக்கக் கூடாது என்றாா்.

பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT