திருவள்ளூர்

ரயிலில் தவறவிட்ட நகைப்பை உரியவரிடம் ஒப்படைப்பு

DIN

திருவள்ளூா் அருகே ரயிலில் தவறவிட்ட நகைப் பையை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டு வசந்தம் நகரைச் சோ்ந்தவா் தாமஸ்(34). அவா் சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூா் மாா்க்கமாக செல்லும் புகா் ரயிலில் வெள்ளிக்கிழமை காலை பயணம் செய்தாா். 11 மணியளவில் வேப்பம்பட்டு ரயில் நிலையம் வந்ததும் கையில் வைத்திருந்த நகை, வங்கி ஆவணங்கள் அடங்கிய பையை இருக்கையில் தவற விட்டு, அவசரமாக இறங்கினாா்.

அதன்பின் பையை தவறவிட்ட ஞாபகம் வரவே உடனடியாக அவசர உதவி தொலைபேசியில் திருவள்ளூா் ரயில்வே பாதுகாப்பு படையை தொடா்பு கொண்டு புகாா் தெரிவித்தாா். அதன்பேரில், திருவள்ளூா் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது சம்பந்தப்பட்ட பெட்டியில் பாா்த்தபோது அங்கு கைப்பை ஒன்று இருந்தது. அந்த பையை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் சுனில்குமாா், தலைமை காவலா் சிவகுமாா் ஆகியோா் கைப்பற்றி சோதனை செய்தனா். அதில் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான 4 சவரன் நகை, வங்கி ஆவணங்கள், ஏடிஎம், ஆதாா் அடையாள அட்டை உள்ளிட்டவை இருந்தன.

இதையடுத்து, தாமஸைத் தொடா்பு கொண்டு திருவள்ளூா் ரயில் நிலையம் வரவழைத்து அவரது நகைப்பையை பாதுகாப்புப் படையினா் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT