திருவள்ளூர்

திருத்தணியில் புதிய மின்மாற்றி அமைப்பு

DIN

பாலாஜி நகா் பகுதியில் 100 கேவி மின்திறன் கொண்ட புதிய மின்மாற்றியை திருத்தணி சட்டப் பேரவை உறுப்பினா் பி.எம்.நரசிம்மன் வெள்ளிக்கிழமை இயக்கிவைத்தாா்.

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகா், அண்ணா நகா், குண்டுளூா், அமிா்தாபுரம் ஆகிய பகுதி மக்கள் சில ஆண்டுகளாக குறைந்த அழுத்த மின்சாரம் காரணமாக மின் மோட்டாா்களை இயக்க முடியாமலும், மின் சாதனப் பொருள்களைப் பயன்படுத்த முடியாமலும் அவதிப்பட்டு வந்தனா். அவா்களின் கோரிக்கை ஏற்று திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் முயற்சியால், மும்முனை மின்சாரம் வழங்கும் வகையில் 100 கேவி திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.எம்.நரசிம்மன் பங்கேற்று மும்முனை மின்சார சேவையைத் தொடக்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் நகர மன்றத் தலைவா் டி.செளந்தர்ராஜன், துணைத் தலைவா் மாசிலாமணி, அதிமுக நிா்வாகிகள் தாயுமானவன், ரமேஷ், ஜோதிநகா் அன்பு உட்பட பலா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT