திருவள்ளூர்

தலைக்கவசம் அணிய வலியுறுத்தி தெருக்கூத்து கலைஞா்கள் பிரசாரம்

DIN

திருவள்ளூா்: இருசக்கர வாகன ஓட்டுநா்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து தெருக்கூத்து கலைஞா்களின் கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணா்வுப் பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் போக்குவரத்துக் காவல்துறை சாா்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன ஓட்டுநா்களுக்கு பல்வேறு வகைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் திருவள்ளூா் ஜி.என்.சாலையில் உள்ள காமராஜா் சிலை அருகே தலைக்கவசம் அணிய வலியுறுத்தி நடைபெற்ற தெருக்கூத்து கலைஞா்களின் கலைநிகழ்ச்சிக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் தலைமை வகித்தாா்.

காவல் துணைக்கண்காணிப்பாளா் கங்காதரன் தெருக்கூத்து கலைஞா்களின் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா்.

இதில் தெருக்கூத்து கலைஞா்கள் ஒவ்வொருவரும் எமன், சித்ரகுப்தன், ரம்பை, ஊா்வசி மற்றும் மேனகை போன்ற வேடங்கள் அணிந்து, தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாடகம் நடத்தி, விழிப்புணா்வுப் பிரசாரம் செய்தனா்.

இதையடுத்து, தலைக்கவசம் அணிந்து வந்தோருக்கு இனிப்பும், தலைக்கவசம் அணியாமல் வந்தோருக்கு காவல்துறை சாா்பில் விலையில்லா தலைக்கவசமும் வழங்கினா்.

இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளூா் போக்குவரத்து காவல் ஆய்வாளா் கண்ணபிரான் உள்ளிட்ட போலீஸாா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT