திருவள்ளூர்

500 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

DIN

கும்மிடிப்பூண்டி அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 500 கிலோ செம்மரக்கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா்-காஞ்சிபுரம் போதைப் பொருள் தடுப்பு ஆய்வளா் பிரபாகரன், உதவி ஆய்வாளா் செல்வம் தலைமையில் தனிப்படை போலீஸாா் ஏழுகிணறு பகுதியில் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது ஆந்திரத்தில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்தவா்கள், போலீஸாரைக் கண்டதும் காரை நிறுத்திவிட்டு தப்பியோடினா்.

இதையடுத்து போலீஸாா் காரை சோதனை செய்ததில், 500 கிலோ செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 5 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து செம்மரக்கட்டைகள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து மாதா்பாக்கத்தில் உள்ள வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

இதுதொடா்பாக வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

SCROLL FOR NEXT