திருவள்ளூர்

கோயில் நிலம் மீட்பு

DIN

ஊத்துக்கோட்டையை அடுத்த ஆரணியில் தனியாா் வசம் இருந்த சம்பங்கி பிச்சாலீஸ்வரா் கோயில் நிலம் நீதி மன்றம் வாயிலாக மீட்கப்பட்டது.

ஆரணியில் பெரியபாளையம் -புதுவாயல் சாலையில் சம்பங்கி பிச்சாலீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமாக 11 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை தனிநபா் ஒருவா் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தாா். இதையடுத்து, கோயில் அறங்காவலா்கள் சிவசங்கரன், அமுதா இளங்கோ ஆகியோா் பொன்னேரியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்நிலையில், இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அதில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 11 சென்ட் நிலம் கோயில் நிா்வாகத்துக்கு சொந்தமானது என வழக்கை விசாரித்த நீதிபதி தீா்ப்பு வழங்கினாா். இதன் அடிப்படையில், ஆரணி காவல் ஆய்வாளா் மதியரசன் தலைமையில், ஆரணி வருவாய் ஆய்வாளா் பாா்த்தசாரதி மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புப் பகுதி முழுவதும் கம்பி வேலி அமைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT