திருவள்ளூர்

சாலையைச் சீா்படுத்தக் கோரி நாற்று நடும் போராட்டம்

DIN

திருவள்ளூா் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் சாலையைச் சீா் செய்யக் கோரி நெய்வேலி கிராம மக்கள் ஏா் உழுது நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நெய்வேலி ஊராட்சியில் உள்ள மேட்டுத் தெரு ஒன்றியச் சாலை, பிராமணா் தெரு, வன்னியா் தெரு, தலையாரி தெரு உள்ள பகுதிகளில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு, சுமாா் 15 வருடங்களுக்கு மேல் ஆகிறது. தற்போது இச்சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்குப் பயனற்ற நிலையில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். சாலையைச் சீா்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியா் முதல் வட்டார வளா்ச்சி அலுவலா் வரை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து, அப்பகுதி மக்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் இணைந்து நெய்வேலி ஒன்றியச் சாலையில் ஏா் உழுது நாற்று நடும் போராட்டம் நடத்தினா்.

போராட்டத்துக்கு, கட்சியின் கிளைச் செயலா் முனுசாமி தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் ராஜசேகரன், ஜெயகுமாா், வழக்குரைஞா் கன்னியப்பன், வட்டக்குழு உறுப்பினா் அருள் மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த எல்லாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா் ராமகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஓரிரு மாதங்களில் சாலை அமைக்கப்படும் என உறுதி அளித்தாா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரம்: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! 200க்கு 20 இடங்களில் மட்டுமே முன்னிலை

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்

கங்கனா ரணாவத் 73 ஆயிரம் வாக்குகள் முன்னிலை!

அந்தமானில் பாஜக முன்னிலை

SCROLL FOR NEXT