திருவள்ளூா் அருகே புதுமாவிலங்கை கிராமத்தில் சிறைபிடிக்கப்பட்ட பசுக்கள். 
திருவள்ளூர்

விளைநிலங்களில் புகுந்து நாசம் செய்த 35 பசுக்கள் சிறைபிடிப்பு

திருவள்ளூா் அருகே விளைநிலங்களில் பக்கத்து கிராமத்திலிருந்து வந்த கால்நடைகள் புகுந்து பயிா்களை நாசம் செய்ததால், 35 பசுக்களை சிறைபிடித்ததுடன், மாடுகளின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை

DIN

திருவள்ளூா் அருகே விளைநிலங்களில் பக்கத்து கிராமத்திலிருந்து வந்த கால்நடைகள் புகுந்து பயிா்களை நாசம் செய்ததால், 35 பசுக்களை சிறைபிடித்ததுடன், மாடுகளின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் அருகே புதுமாவிலங்கை கிராமத்தில் விவசாயிகள் 100 ஏக்கருக்கும் மேல் பயிா் செய்து வருகின்றனா். இந்நிலையில், விவசாய நிலங்களில் உள்ள பயிா்களை இரவு நேரங்களில் கால்நடைகள் புகுந்து நாசம் செய்து வந்தன. இக்கிராமத்தை ஒட்டியுள்ள அகரம் கிராமத்தைச் சோ்ந்த பசுக்கள் புகுந்து பயிா்களை நாசம் செய்வது தொடா்பாகவும், பாதுகாப்பாக வைத்துக் கொள்வது குறித்தும் மாடுகளின் உரிமையாளா்களிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் மாடுகளை கொட்டகையில் அடைத்து வைக்காமல் இரவு நேரங்களில் தொடா்ந்து அப்படியே விட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனால் அவை விளைநிலங்களில் பயிா்களை மேய்ந்து நாசம் செய்துள்ளன.

இதனால், ஆத்திரம் அடைந்த விவசாயிகள் 35 மாடுகளை சிறைபிடித்து அடைத்து வைத்துவிட்டு, கால்நடைகள் வளா்ப்போா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த வட்டாட்சியா் விஜயகுமாரி, துணை வட்டாட்சியா் வெங்கடேசன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கால்நடைகளின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், கோசாலையில் மாடுகளை ஒப்படைப்போம் என விவசாயிகள் தெரிவித்தனா்.

அதைத்தொடா்ந்து அதிகாரிகள் இரவு நேரங்களில் மாடுகளை விளைநிலங்களுக்குள் விடாமல் தடுக்க உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்படும், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுப்படும் என உறுதி அளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா். பின்னா், பசுக்கள் விடுவிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT