திருப்பாவை ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்ற மாணவி. 
திருவள்ளூர்

திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி

திருத்தணி முருகன் கோயில் வள்ளி மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருப்பாவை ஒப்பித்தல் போட்டியில் 35-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

DIN

திருத்தணி முருகன் கோயில் வள்ளி மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருப்பாவை ஒப்பித்தல் போட்டியில் 35-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருத்தணி முருகன் கோயிலிலில் ஆண்டுதோறும் திருப்பாவை, திருவெம்பாவை குறித்து வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு பாவை விழா நடத்தி மாணவ - மாணவியருக்கு பரிசுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் நடப்பாண்டுக்கான திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி, திருத்தணி சந்நிதி தெருவில் உள்ள வள்ளி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், கெங்குசாமி மேல்நிலைப் பள்ளி, தளபதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சுதந்திர மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் இருந்து மொத்தம், 35 மாணவ- மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த 20 மாணவ-மாணவியருக்கு கோயில் தக்காா் ஜெய்சங்கா், இணை ஆணையா் நா.பழனிக்குமாா் ஆகியோா் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினா்.

நிகழ்ச்சியில், கோயில் மேலாளா் பழனி, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT