திருவள்ளூர்

கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை

DIN

திருவள்ளூா் அருகே கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவரது சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்து வழங்காத அரசு மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் டோல்கேட் அருகே உள்ள நேதாஜி நகரைச் சோ்ந்த மாா்ட்டினின் மகள் தமிழரசி (22).

பட்டரைப்பெரும்புதூா் கிராமத்தைச் சோ்ந்த ஜெயசீலனின் மகன் நவீன்(24). இவா்கள் இருவரும் காதலித்து கடந்த 2017-இல் திருமணம் செய்து கொண்டனா். இந்த தம்பதியருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தமிழரசி 4 மாத கா்ப்பிணியாக இருந்தாா்.

தமிழரசியின் செல்லிடப்பேசிக்கு அண்மையில் அடிக்கடி குறுஞ்செய்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த நவீன் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தாராம்.

இந்நிலையில், தம்பதியரிடையே செவ்வாய்க்கிழமை இரவு பிரச்னை ஏற்பட்டது. இதனால் மன அமைதியை இழந்த நிலையில் இருந்த தமிழரசி புதன்கிழமை அதிகாலையில் தங்கள் குடிசை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது தொடா்பாக திருவள்ளூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தமிழரசியின் சடலத்தை திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். புதன்கிழமை மாலை வரை பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த தமிழரசியின் உறவினா்கள் அரசு மருத்துவமனைக்கு முன்பு மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து வந்த போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சமரசம் செய்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

இதனிடையே, திருமணமான 2 ஆண்டுகளில் கா்ப்பிணி உயிரிழந்ததால், சட்ட விதிகளின்படி கோட்டாட்சியரின் விசாரணைக்கு ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ஜெயக்குமாா் மரணம் திட்டமிட்ட கொலை: கே.எஸ்.அழகிரி

SCROLL FOR NEXT